உன்னை நீயே கண்காணித்துக் கொள்வாய்
ஓர் எதிரியாய் உன்னைப் பாவித்து!
பிறரை நீ ஆள முடியாது!
உன் உணர்ச்சிகளை
முதலில் நீ கட்டுப் படுத்த
முடியாது போனால்!
உனது மனச் சாட்சிக்கு நீ
அடிபணிவாய்!
உன்னை நீயே கண்காணித்துக் கொள்வாய்
ஓர் எதிரியாய் உன்னைப் பாவித்து!
பிறரை நீ ஆள முடியாது!
உன் உணர்ச்சிகளை
முதலில் நீ கட்டுப் படுத்த
முடியாது போனால்!
உனது மனச் சாட்சிக்கு நீ
அடிபணிவாய்!
திருத்திவிட முடியும்
எழுத்து பிழையைப் போல்
சரிசெய்ய பார்க்கிறேன்
நமக்குண்டான பிணக்குகளை …
வார்த்தைகளை விட்ட பிறகு
வலுவிழந்து போகும்
உணர்வுகளை போல
உள்ளத்தில் ஒரு வெற்றிடம்
நீ இல்லாமல் …
உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத் தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன்
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீயில்லையென்றால் என்னாவேன்
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்களோடு
எனை தொடரும் பறவைகளோடு
பெண்ணே பெண்ணே
உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதை தாண்டி ஒன்றுமே இல்லை …
குரல் : நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோசல்
வரிகள் : நா. முத்துக்குமார்
படம் : அங்காடி தெரு
இசை : G .V பிரகாஷ் குமார், விஜய் ஆண்டனி
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே
பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை
ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாரு
என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே
வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா
படம் : ஏழாம் அறிவு
குரல் : SPB
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கேயெங்கே என்று உன்னை தேடித் தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே
அறியாதொரு வயதில் விதைத்தது
அதுவாகவே தானாய் வளர்ந்தது
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்
அட யாரது யாரதை பறித்தது
உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா
நான் கேட்டது அழகிய நேரங்கள்
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்
நான் கேட்டது வானவில் மாயங்கள்
யார் தந்தது வழிகளில் காயங்கள்
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதைதானே
அது உயிருடன் எரிக்குதுடா
படம்: வெப்பம்
குரல் : சுசன்னே
இசை : ஜோஷ்வா ஸ்ரீதர்
வரிகள் : முத்துக்குமார்