தொகுப்பு

Archive for பெப்ரவரி, 2007

இதயம் . . .

பெப்ரவரி 28, 2007 பிரியா மறுமொழியவும்

உள்ளேயிருந்தால் உன் வருகையைப்
பார்க்க முடியாமல் போய்விடுமாம்.
மேலே வந்து
கண்வழியே எட்டி எட்டி பார்க்கிறது
என் இதயம் . . .

வெட்கமே இல்லையா?

பெப்ரவரி 28, 2007 பிரியா மறுமொழியவும்

நாம் தனிமையில் இருக்கும்போது
இப்படி இடையில் வந்தமர்கிறதே…
உன் வெட்கத்துக்கு வெட்கமே இல்லையா?

அருட்பெருங்கோ.

வெட்கம் !!!

பெப்ரவரி 28, 2007 பிரியா மறுமொழியவும்

நீ ராட்சசி என்றேன் – சிரித்தாய்.
நீ கோபக்காரி என்றேன் – சிரித்தாய்.
நீ அழகி என்றேன் – வெட்கப்பட்டாய்.
உண்மையைச் சொன்னால்தான்
வெட்கம் வருமோ?

ஹைக்கூ . . .

நான் “கொடுத்து வைத்தவன்”
உன்னிடம்
என் இதயத்தை

-அருட்பெருங்கோ

அது ஒரு கார்காலம் …

யார் யாரோ பார்த்துப்
போகும் என் கவிதைகளை
என்றேனும் நீ
வாசித்திருக்கிறாயா?

காலைப் பனியிலும்
மாலைகளின் மடியிலும்
வீழ்ந்து கிடக்கும்
உன் பற்றிய என்
கவிதைகளை என்றேனும்
நீ உணர்ந்திருக்கிறாயா?

நீ இல்லாத என்
பயணங்களில்
கடந்து செல்கின்ற
ஒவ்வொரு
வேகத்தடையும்
உன் இதயத்
துடிப்பை எனக்கு
உணர்த்துகிறது

கருப்பாக
இருப்பதாக
குறைபட்டுக்
கொள்கிறாய்
சிலைகள்
எந்த நிறத்தில்
இருந்தால் என்ன?

Naveen Prakash