தொகுப்பு

Archive for ஏப்ரல், 2007

திருக்குறள்

திருக்குறள்
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

விளக்கம்:
அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ?

கண்ணீரே…

இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே…

கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே…

தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே

உன் பார்வை பொய்தானா
பெண்ணென்றால் திரைதானா
பெண் நெஞ்சே சிறைதானா சரிதானா…
பெண் நெஞ்சில் மோகம் உண்டு
அதில் பருவத் தாபம் உண்டு
பேராசைத்தீயும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று

புதிர் போட்ட பெண்ணே நில் நில்
பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடைசெய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல நீளும்

வான் நதியே நீ எங்கே வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே…
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு

ஏ ——– நில் நில்
ஒரு மௌன வார்த்தை சொல் சொல்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்

-உயிரே படத்தில் வரும் கண்ணீரே பாடல்

தினம் ஒரு திருக்குறள்

குறள்:

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

விளக்கம்:

சொன்னால், பயன் தருகின்ற சொற்களையே யாவரும் சொல்லுக ; பயனில்லாத சொற்களை ஒருபோதுமே எவரும் சொல்லாதிருக்க வேண்டும்

என்ன சொல்ல போகிறாய் ……

அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதும்
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே – ஒரு ஆயுள் வேண்டும்
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் ….
இல்லை என்ற சொல்லை தங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய் ……

திலோத்தமா

ஏப்ரல் 25, 2007 பிரியா 1 comment

நான் மடியேந்தி மண் போல் யாசித்தேன்
என் மழைத்துளி ஏன் தான் யோசித்தாய் மனம் தாங்காதே
பின் வாங்காதே திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

தினம் நீ தானே உன்னை கேட்கிறேன் அட என் கண்ணை
நானே பார்க்கிறேன் என் கண்ணீரில் நன்றி சொகின்றேன்
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

மாற்றம் மனதில் ஒரு மாற்றம் மாற்றம் விழியில் தடுமாற்றம்
தவறல்லவா உன் நெஞ்சுக்கு தாழ்ப்பாளிடு

ஏகி….. ஏகி….. ஏகி… ஏகி காதல் அனைவர்க்கும் பூவோ
எனக்கு மட்டும் முள்ளோ
முள்ளோடு நான் சொல்லாமலே
முத்தாடவா திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

இது சொல்லாத சோகம் அல்லவா அதை மெளனங்கள்
சொல்லும் அல்லவா தள்ளிப் போனாலும் உள்ளம் போகாது

திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது அதை உன் காதில்
சொன்னால் நல்லது