ஆசை
புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா!
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா!
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட்டுக்குருவி
சிட்டாக செல்லும் சிறகை தந்தது யாரு
பட் பட் பட் பட் பட் பட் பட் பட்டாம்பூச்சி
பல நூறு வண்ணம் உன்னில் தந்தது யாரு
இலைகளில் ஒளிகின்ற பூக்கூட்டம்
எனை கண்டு எனை கண்டு தலையாட்டும்
இவைகளில் ஒலிகின்ற குயில் கூட்டம்
எனை கண்டு எனை கண்டு இசை மீட்டும்
பூவனமே என்தன் மனம்
புன்னகையே என்தன் மதம்
அம்மம்மா!
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்
துள் துள் துள் துள் துள் துள் துள் துள்ளும் அணிலே
மின்னல் போல் போகும் வேகம் தந்தது யாரு
ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்லென ஓடும் நதியே
சங்கீதஞானம் பெற்று தந்தது யாரு
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளையருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
-படம் ஆசை
deva mudhal muraiyaga ilayaraja badhipil irundhu AR Rahman badhipirku senra bodhu vandha nalla paatu.
adhu A.R.Rahman baathippu illai cowey. edho oru english paatu. andha paatula varra background music laam appadiye suttathu.
priya, paadalai inge pathiyum bothu, adhan isai amaippaalar, paadal ezhuthiyavar, paadagar paadagi pondra vivarangalaiyum koduthaal innum sirappai irukkum.
Sadish