தொகுப்பு

Archive for செப்டம்பர், 2007

குழந்தை

செப்டம்பர் 28, 2007 பிரியா 2 பின்னூட்டங்கள்

அழத் தெரியும்
அழ வைக்கத் தெரியாது.

விழத் தெரியும்
யாரையும்
விழவைக்க தெரியாது.

சிரிக்கத் தெரியும்
சிரிக்க வைக்க தெரியும்
யாரையும்
சிரிப்பாய் சிரிக்க வைக்கத்
தெரியாது.

சுட்ட இடம் : கூடல்.காம்

யாரிடமும் தோன்றவில்லை

செப்டம்பர் 27, 2007 பிரியா 2 பின்னூட்டங்கள்

இரு விழிகளிலும் விழிகளும் இணைந்தன
இரு இமைகளும் இமைகளும் திகைத்தன
ஒரு வேதியியல் மாற்றம் நேருதே
தட்பம் வெப்பம் தடுமாறுதே

மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே…..
மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே…..

இது கீறலா மழை சாரலா இது கானலா இளவேனிலா
இது மீறலா பரிமாறலா இது காதலா கண்மூடலா

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்…
நான் கண்கள் மூடிப் பார்க்கிறேன்…
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன் கார்மேகம் வந்து மோதியே
ஒரு விண்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே…

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்

இது கீறலா மழை சாரலா இது கானலா இளவேனிலா
இது மீறலா பரிமாறலா இது காதலா கண்மூடலா
மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே

நான் அறியாமல் எனை ரசித்தாய்
என் மௌனங்களை மொழி பெயர்த்தாய்

உன்னைக் கண்டப் பின்னே எந்தன்
பெண்மைகளும் உயிர் பெருதே
கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட
வெட்கங்களும் வெளி வருதே

கரையினில் நின்ற போதும் மிதக்கிறþன்
அணைத்திட நீளும் கையை அடக்கினேன்
என்னைத் தந்து உன்னை வாங்க வந்தேனே
இளவேனில் காற்றன் வெப்பம் தாக்க நின்றேனே (யாரிடமும்…)

நான் கனவுகளே கண்டதில்லை
கனவாய் யாரிடமும் சென்றதில்லை

முன்னே பின்னே பார்த்ததில்லை
இருந்தம் மனம் உனை நாட
முன்னூறாண்டு ஒன்றாய் வாழ்ந்த ஞாபகத்தில் தடுமாற

விரல்களின் மோதிரங்கள் நீக்கினேன்
உன் விரல் தேடி வந்து கோர்க்கிறேன்

இந்தச் சொல்லும் இந்த கனவும் நிற்கட்டும்
நமை வானம் வந்த ஈரக்கையால் வாழ்த்தட்டும்

உயிரே என் உயிரே

செப்டம்பர் 27, 2007 பிரியா மறுமொழியவும்

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஹோ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னைப் பாரடி

இது வரை எங்கிருந்தாய் ஆ…..
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்

உனக்குள்ளே ஒழிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா
இன்னும் என்னைப் புரியலையா

நான் சிரித்து மகிழ்ந்து சிலிர்க்கும் வரத்தை நீ கொடுத்தாய்
நான் நினைத்து நினைத்து ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய்

எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஹோ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

என்னருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னைப் பாரடி

உன்னுடன் இருக்கையிலே லே…..
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா

உன்னுடன் நடக்கையிலே
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே

நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாசக் காற்றை மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்

நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னைப் பாரடி

நட்புக்குள்ளே ஒரு பிரிவு

செப்டம்பர் 27, 2007 பிரியா மறுமொழியவும்

நட்புக்குள்ளே ஒரு பிரிவு இங்கு வந்தது
ஏனென்று அது புரியவில்லை
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது
ஏனென்று அது தெரியவில்லை
அந்த நேசம் இந்த பாசம் நட்பைபோலே
எங்கும் ஏதும் உயர்ந்ததில்லை

வாழ்க்கை அது எங்கு சென்று முடியும்
யாரும் அதை அறிந்ததில்லை

காதல் வலி அது தெரியவில்லை
நட்பின் வலி அது புரியவில்லை

விழியில் உன் விழியில்

செப்டம்பர் 27, 2007 பிரியா 3 பின்னூட்டங்கள்

விழியில் உன் விழியில் வந்துவிழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே…
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என் வழிதுணை
நீ தான் என்று நிழல் சொன்னதே…

உன்னோடு வாழ்ந்திட தானே நான் வாழ்கிறேன்…
உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன்
ஓ தோள் சாய்கிறேன் ………..

இதுவரை என் இருதயம்
இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல்முறை இந்த இளமையின்
சுகம் உனக்கினி நான் தூங்கவில்லை
குடையோடு நான் போனேன்
மழையினில் ஏனோ நனைகின்றேன்..

கடிகாரம் இருந்தாலும்
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்..
என் தனிமைக்கு தனிமை நீ வந்து கொடுத்தாய்..

சிரிப்பிலே உன் சிரிப்பிலே
சிறையடைக்கிறாய் நான் மீளவில்லை
உறவுகள் ஒன்று சேர்கையில்
என்ன ஆகின்றேன் என தெரியவில்லை

உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே….
உரையாடல் தொடர்ந்தாலும்
காலங்கள் கூட பிடிக்கிறதே..
என் கனவுக்கு கனவு நீ வந்து கொடுத்தாய் . . .