தொகுப்பு

Archive for செப்டம்பர், 2007

ஊட‌ல் ? ? ?

செப்டம்பர் 24, 2007 பிரியா 3 பின்னூட்டங்கள்

எது சரி
எது தவறு
யார் அறிவார் ? ? ?

உன‌க்கு அது ச‌ரி
என‌க்கு அது த‌வறு

உன் ம‌ன‌ம் நான‌றியேன்
என் ம‌ன‌ம் அதை நீ அறியாய்

இப்ப‌டியே
இருந்துவிட்டு போக‌ட்டும்
ந‌ம‌க்கான‌ ஊட‌ல்க‌ள்

மீண்டும் . . .

செப்டம்பர் 24, 2007 பிரியா 3 பின்னூட்டங்கள்

எனக்கான வலியை
நான் மட்டுமே சுமக்கிறேன் . . .

பேச யாருமில்லாத போது
தனிமையே துணை . . .

என் மெளனம்
எனக்கானது மட்டுமல்ல‌
உன‌க்கானதும் தான் . . .

விதியை மீறி
விளையாட‌ முடிய‌வில்லை

மீண்டும் அதே
ஆறாத‌ காய‌ங்க‌ளுடன்
உன்னோடு பேச‌
தயாராய்
நான் . . .