தொகுப்பு

Archive for அக்டோபர், 2007

தொலைந்து போனவள் Part 2

Part 1 : http://priyatamil.wordpress.com/2007/10/11/story-7/

[ ஒரு சின்ன விசயம் அந்த ரமா வேறு யாருமில்லை நான் தான், So இனி ரமாக்கு பதிலாக நான் என தொடரும் ]

என்ன கொடுமை இது ? ? ? மீனாவுக்கு வேலை வந்துவிட்டது. அக்கா என்னிடம் Bye சொல்லிவிட்டு போனாள். நான் தான் வெட்டி Officer ஆச்சே, இனிமே Chatting தான். . . ;)

என் கல்லூரித் தோழி காஞ்சனா Onlineல் வந்தாள்.நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தேன் . திடீரென்று P M (Project Manager ) அழைக்க எழுந்து போனேன்.கொஞ்ச நேரம் Project விஷயமாக பேசிவிட்டு,திரும்பவும் Chatting…அதற்குள் மணி 1.15 ஆகிவிட்டது . . . Lunchக்கு அழைக்க எழுந்து போனேன்.Lunchல் தான் மீனா சொன்னாள், நாளைக்கு அவள் வரமாட்டாள் என்று . . . “என்ன விஷயம் டீ ,நாளைக்கு பொண்ணு பாக்க யாராவது வராங்களா” என்று வழக்கமான நக்கலை ஆரம்பித்தேன். இல்ல டீ நாளைக்கு எங்க relative marriage .அதான் என்றாள் மீனா.சரி டீ Enjoy,அங்க போயாவது ஒரு நல்ல பையனா புடிச்சிக்கோ டீ All the best என கண்ணடித்தேன்.

“போடீ Loosu,என்ன எவன் டீ பாக்க போறான்” என்றபடி நகர்ந்தாள் மீனு.

மணி 6.45 என்றது.மீனா Onlinஎ ல் இல்லை.சரியென்று நான் மட்டும் கிளம்ப தயாரானேன்.

வீட்டுக்கு போக 8 ஆனது.எல்லா வேலைகளையும் முடித்து தூங்க 10 ஆனது.திரும்பவும் அதே Office அதே வேலை…ம‌திய‌ம் 2 ம‌ணிக்கு மீனுவிட‌ம் இருந்து போன் வ‌ந்த‌து,Register Marriage ப‌ண்ணிக் கொண்ட‌தாக‌ சொன்னாள்.எங்கோ வ‌லித்த‌து.எதையும் சொல்லாம‌ல் “all the best”,கொஞ்ச‌ம் வேலை இருக்கு என்ற‌படி போனை க‌ட் ப‌ண்ணினேன்.
வேலை பார்க்க‌ பிடிக்காம‌ல் ம‌ன‌சு எதை எதையோ நினைக்க‌ ஆர‌ம்பித்த‌து.

“அம்மா அப்பாவிட‌ம் கூட‌ சொல்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ க‌ல்யாண‌ம்,24 வ‌ருச‌மா உன‌க்கு என்ன‌ வேணும்ன்னு நீ கேக்காம‌லே செஞ்ச‌ அவ‌ங்க‌ளுக்கு ஒரு பைய‌னை பார்த்து க‌ல்யாண‌ம் ப‌ண்ணி வைக்க‌ தெரியாதா ? ?,அப்படியே நீ பண்ண Love true வ இருந்தா,அந்த லவ்வே உங்கள சேத்து வைக்கும்,ஏன் இப்படி அவசரப்பட்டீங்க?அப்படி என்ன அவசரம் என்று கேக்கணும் போல இருந்தது”.இப்ப‌டி எதை எதையோ நினைத்து கொண்டே இருந்தேன்

காலையில் ரஞ்சனி எழுப்ப‌ ரொம்ப‌வே க‌ஷ்ட‌ப்ப‌ட்டு எந்திரித்தேன்.ஏன்டீ லூசு, bucket ஐ வைச்சிட்டு குளிக்காம‌ இருக்கியே போய் குளி டீ வேற‌ எவ‌ளாவ‌து போய் குளிக்க‌ போறா,போடீ போ என்றாள்.சுய‌ நினைவு வ‌ந்த‌வ‌ளாய் சிவாவிட‌ம் கேட்டேன்.டீ நா இப்போ தான் Office ல‌ இருந்தேன் அதுக்குள்ள‌ எப்ப‌டி இங்க‌ என‌ பேந்த‌ பேந்த‌ முழித்தேன்.

ஏன்டீ க‌ன‌வு க‌ண்டு என் உயிர‌ எடுக்க‌ற‌,போய் குளி டீ என்றாள்.அப்போ மீனா க‌ல்யாண‌ம் எல்லாம் பொய்யா,அவ‌ வீட்டுக்கு தெரியாம‌ க‌ல்யாணம் ப‌ண்ணிகலையா என்ற‌ப‌டி குளிக்க‌ போனேன்

[ முற்றும் ]

Categories: கதை

அகம்

அக்டோபர் 19, 2007 பிரியா மறுமொழியவும்

தனித் தனியாக
வந்தார்கள்
ஜோடி சேர்ந்தார்கள் . . .

ஜோடி ஜோடியாக
ஆனார்கள்
தனித் தனியாய்
போனார்கள் . . .

[மு.மேத்தா]

புறம்

அக்டோபர் 19, 2007 பிரியா மறுமொழியவும்

கூடிக் கூடிப்
பேசிக் கொண்டார்கள்

எப்போது
பிரிந்து போகலாம்
என்று . . .

[மு.மேத்தா]

சில கல்லூரி நினைவுகள் . . .

சண்டையிட்டுப்
பிரிந்தோம்
காரணமின்றி . . .

இணைவதற்காய்
தேடிக் கொண்டிருக்கிறோம்
காரணங்களை . . .

சில கல்லூரி நினைவுகள் . . .

அக்டோபர் 19, 2007 பிரியா மறுமொழியவும்

நீ இல்லாத
நேரத்திலும்
உன் இருக்கையில்
அமர்ந்திருக்கிறது
உன் அழகு . . .