முகப்பு > பாடல்கள் > கல்லை மட்டும் கண்டால் . . .

கல்லை மட்டும் கண்டால் . . .

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு எண் கழியாது
அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது

ஊன கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது

வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீரவைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது

ராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்

நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா

கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா

சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது

படம்: தசாவதாரம்
இசை: ஹிமேஷ் ரேஷ்மய்யா
பாடல்: வாலி
பாடியவர்: ஹரிஹரன்

பாடலை கேட்க

Categories: பாடல்கள் குறிச்சொற்கள்:
  1. 2:14 பிற்பகல் இல் ஜூன் 20, 2008 | #1

    நானும் ரசித்த பாடல். நேரம் ஒதுக்கி, எழுத்தில் பதிந்தமைக்கு நன்றி.

  2. 3:53 மு.பகல் இல் ஜூன் 21, 2008 | #2

    பாடல் வரிகளுக்கு நன்றி!

  3. 4:51 பிற்பகல் இல் ஜூன் 24, 2008 | #3

    என்ன சொல்ல நான்…..
    உனது எண்ணங்களை கண்டு செல்லலாம் என்று உள்ளே வந்தேன்…..
    உன்னுள் உள்ள பல வண்ணங்களை கண்டு நெகிழ்ந்து போனேன்……
    சொற்பனதிலும் சுவைக்கும் வண்ணம் இருந்தன உன் சிந்தனைகள்…..
    தமிழை விரும்பும் தமிழசிக்கு நான் தலை வணங்குகிறேன்……

  4. 8:24 மு.பகல் இல் ஜூன் 29, 2008 | #4

    That is a wonderful song. As a devotee of Rama, I love this song very much. I like the lines, ” ooril undu Ayiram, raaja raaja raajan thaan , raajanukku raajan enga ranga rajan thaan.” Good job. Keep it up.

  5. 4:36 மு.பகல் இல் ஜூலை 2, 2008 | #5

    இந்தப்பாடலில் உள்ள சிறப்பு என்னவென்றால், பகுத்தறிவு புகட்டும் பாடலாகவும் இருக்கிறது, பக்திப் பாடலாகவும் இருக்கிறது.
    உதரணம்:
    ஊனக்கண்ணில் பார்த்தால் யாதும் குற்றம் தான்
    ஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்.

    ஆனால் இந்தப்பாடலில் பொதிந்துள்ள இரு வரிகளை எல்லா பகுத்தாறிவாளர்களும் ஏன் கண்டு கொள்ளவில்லை?
    ராஜலக்ஷ்மி நாயகன் ச்ரினிவாசன் தான்
    ச்ரினிவாசன் சேய் இந்த விஷ்ணு தாசன் தான்

    கமலின் பெற்றோர்கள் பெயர், ராஜலக்ஷ்மி ச்ரினிவாசன்.

    தகவல்: http://idlyvadai.blogspot.com

  6. 9:36 மு.பகல் இல் ஜூலை 2, 2008 | #6

    ippadiyum irukka ? nice info vijay

  7. 12:48 பிற்பகல் இல் ஜூலை 5, 2008 | #7

    சுப்பரா பதிச்சிருக்கீங்க…
    இசையுடன் கேட்கும் போது தெளிவாக விளங்கவில்லை. அந்த குறையை
    நீக்கி வைத்த என் ” பிரிய தோழி” க்கு நன்றிகள்.

  8. 12:52 பிற்பகல் இல் ஜூலை 5, 2008 | #8

    please visite my site..
    http://sivanaathan.blogspot.com

  9. K.Ravishankar
    6:44 மு.பகல் இல் ஆகஸ்ட் 2, 2008 | #9

    Dear Priya,

    “Kallai Kandal” song tune was copied from a Malayalam Movie ” Sainyam”
    The song is “Baggy jeansum”. Visit “You Tube” and type “Sainyam songs”
    in the video title bar. You can hear the song. Also visit “itwofs.com” you could come across where from our Music Director”s “creative music” created. Our Music genius Deva gets 100/100 for his creativity(back to back xerox)

  1. 7:22 மு.பகல் இல் ஜூன் 21, 2008 | #1
  2. 10:55 மு.பகல் இல் ஜூன் 22, 2008 | #2