தொகுப்பு

Archive for ஜூலை 2, 2008

Forwarded கவிதைகள்

ரொம்ப நாளைக்கு அப்பறமா கவிதை எழுதறேன். சொந்த சரக்கு இல்லை. Forwarded … அந்த கவிதைகள் உங்கள் பார்வைக்கு…

இறைவன் படைத்து
இயல்பு கெடாமல்
தொடரும் பட்டியலில்
இன்றும் இருக்கிறது
குழந்தையின் சிரிப்பு…

ஆண்பால்
பெண்பால்
பொதுவானது
நட்பால் . . .

தாயின் சாவுக்காக
ஊர்விரையும் மகன்
பேருந்தில் முழுநீள
நகைச்சுவைப் படம் . . .

மழையின் முடிவு
மண்ணில்…
நதியின் முடுவு
கடலில் …
காற்றின் முடிவு ? ? ?
அதுவே நம் காதலின் முடுவும் …


யார் யாரோ அணைத்து மகிழ்ந்தாலும்
அனைத்தும் கொடுத்தாலும்
இறுதியில் அன்னையைத் தேடும்
சிறு குழந்தை போல்
உன்னையே தேடுகிறது இதயம் …

எப்படி இருக்குங்க .. நல்லா இருக்கா ??

Categories: கவிதைகள் குறிச்சொற்கள்:

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிறபொழுது
தொடு வானத்தை தொடுகிற உணர்வு

ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
நின்றாலும் கால்கள் மிதக்கும்

நடை உடைகள் பாவனைகள் மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா ? இல்லை கடவுளா?
புரியாமல் திணறிப் போனேன்

யாரேனும் அழைத்தால் ஒரு முறைதான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில் உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போவேன்

இது ஏதோ புரியா உணர்வு
இதை புரிந்திட முயன்றிடும்பொழுது
ஒரு பனிமலை ஒரு எரிமலை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்

நதியாலே பூக்கும் மரங்களுக்கு
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா? கொஞ்சம் புரியுமா?
கரையோர கனவுகள் எல்லாம்

உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பிவிட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
திறக்காத கதவுகள் திறக்கும்

தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் கிடையாது

அது புரியலாம் பின்பு தெரியலாம்
அதுவரையில் நடப்பது நடக்கும்

படம்: யாரடி நீ மோகினி
பாடியவர் : கார்த்திக், ரீட்டா
இசை : யுவன்

Categories: பாடல்கள் குறிச்சொற்கள்: