தொகுப்பு

Archive for பெப்ரவரி, 2009

சில மொக்கைகள்

காதில் விழுந்த கலக்கல் மொழிகள்

பெப்ரவரி 19, 2009 பிரியா மறுமொழியவும்
Categories: அறிவுரை

மனசெல்லாம் உன்னை நினைத்து வலிக்குது

மனசெல்லாம் உன்னை நினைத்து வலிக்குது தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா
வான் என்று உன்னை நினைத்தேன் வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே
கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்

கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே
தண்ணீரில் குமிழியை போல வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள் மயானம் ஆகியதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
என் பள்ளியே முற்று புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும் உனை நினைத்தே தோழா

நீ எங்கு போனாலும் உன் நினைவாய் அலைகிறேன்
என் நண்பனே உனக்காக கிடக்கிறேன் என் நண்பனே
கரைகிறேன் உன் நினைவிலே
உன்னை இழக்கிறேன் என் நண்பனே

எனக்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய்
உன்னாலே நினைவுகளாலே மோதி விடுகின்றதே
உயிராய் நீ இருந்தாய் கனவிலும் தெரிந்தாய்
நண்பா உன் நினைவால் நடைபிணம் ஆகிறேன்

படம் : குளிர் 100 டிகிரி
இசை : சசி
பாடியது : ரஞ்சித்

பனிக்காற்றே பனிக்காற்றே

பெப்ரவரி 11, 2009 பிரியா மறுமொழியவும்

பனிக்காற்றே  பனிக்காற்றேபரவசமா  பரவசமா (2)
சத்தம்  இல்லா  தீபாவளியே  நெஞ்சே  கொண்டாடு  
முத்தம் என்னும்  சூறாவளியில்  மூச்சே  திண்டாடு  
உயிரால்  உயிரை  அன்பே  நீ மூடு
பனிக்காற்றேபனிக்காற்றே… பரவசமா…  பரவசமா… (2)
 
நாம்  வாழும்  வீடு  ஆள்  இல்லா  தீவு  
யாருக்கும்  அனுமதி  கிடையாது  
Oh…வழி  மாறி  யாரும்  வந்தாலும்  வரலாம்  
வீட்டுக்கு  முகவரி  கூடாது
நான்  தேடும் … முகமானாய் …நான்  வாங்கும் …மூச்சானாய் …
உயிரோடு …உயிரானாய் …நான்  எல்லாம் …நீ  ஆனாய் …
எதை  இழந்தாலும்  இழப்பேன்  
உன்னை  மட்டும்  நீங்க  மறுப்பேன்
ஏனோ  என்  நெஞ்சம்  நிறைந்திருக்கு  

 

 
தூக்கங்கள்  உனது  கனவெல்லாம்  எனது  
தூக்கத்தை  தள்ளிப்  போடாதே  
பாதைகள்  உனது  பாதங்கள்  எனது  
பயணத்தை  தள்ளி போடாதே ,
நீ  நினைத்தால் … மறுக்கனமே …உன்  அருகே …நானிருப்பேன் …
உன்  வழியில் …கால்மிதியாய் …மேகங்களை …
நான்  விரிப்பேன் …இருவருமே  தூங்கி  விடலாம்  
சில  ஜென்மம்  தாண்டி  எழுந்தால்  
கனவில்  நாம்  மீண்டும்  சந்திப்போம்  
 
 படம் : ரன்
நன்றி : சிவரஞ்சினி ( Who typed this for me)

சத்தமில்லாத தனிமை கேட்டேன்

பெப்ரவரி 11, 2009 பிரியா மறுமொழியவும்

சத்தமில்லாத தனிமை கேட்டேன்
யுத்தமில்லாத உலகம் கேட்டேன்
இரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர் துளியைக் கேட்டேன்
வரிகளில்லா வார்த்தை கேட்டேன்
வயதுக்கு சரியான வாழ்க்கை கேட்டேன்
இடிகளில்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
இரவில் நனையும் சோலை கேட்டேன்
நீலக்குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருள புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன்

துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மறக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக்குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலை மேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்

மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையில் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்

ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற புல்வெளி கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்

இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் தாவும் வேகம் கேட்டேன்
கயவரை எரிக்கும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளி போல் வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்..