தேவதையைக் கண்டேன்
தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.
ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழி தேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன் தனித்தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்.
விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதே
தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய்ப் போகும் போகும் போகும்
சோழியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.
Movie : காதல் கொண்டேன்
Music : யுவன் ஷங்கர் ராஜா
Singer : ஹரிஷ் ராகவேந்தர்
like this songs every one heard and memorized.. it will be nice if u expose the unpopular songs,but has good lyrics..
(sorry just take it as a frnd,dnt think tat this s advice or degrade..)