நினைவுகள்….
பிரிந்தபடி இணைந்திருந்தோம்
இணைந்தே பிரிந்தோம்…
ஒரு நொடி ஒரு நிமிடம்
ஒரு மணி நேரம் என
ஒரு மாதமானது….
பேசுவாய் என தெரிந்தும்
பேசாமலே இருக்கின்றேன்
உ(எ)னக்காக….
——————————————-
உன்னை நினைக்க மறுத்து
மறக்க நினைத்து
எதெதோ செய்கிறேன்….
எங்கேயோ இருந்தும் அனிச்சை செயலாய்
இருக்கிறாய் நீ…..
வேண்டாம் என்று சொன்னாலும்
துடிக்கின்ற இதயத்தை போல…..
———————————————-
நான் தான் நீ ….
நீ தான் நான் ….
பிரிவு நமக்கில்லை என
எதெதோ சொல்லி
எனை தேற்ற முயல்கிறாய்…..
உண்மை எதுவென உணர்ந்தும்
‘அந்த சாக்லேட் தான் வேண்டுமென’
அடம் பிடிக்கும் குழந்தையாய்
உன்னிடமே மீண்டு(ம்) வருகிறது
நினைவுகள்….
– பிரியா
Categories: கவிதைகள்
chillna en oru sharal en idhayahthia thodu senrathu
நன்றி பிரியா.
இந்த கவிதையை படித்தபின் மீண்டும் என் மனது பழைய நினைவுகளில் மூழ்கத்துடங்கி விட்டது.
நன்றி ஈஸ்வர்…
என் மனதில் உள்ளதை அப்படியே கவிதை வரிகளில் காண முடிகிறது.
கண்ணன் சொன்னது போல் இக்கவிதை இதயத்தை வருடத்தான் செய்கிறது.