முகப்பு > கதை, சும்மா > கொஞ்சம் நட்பு நிறைய காதல்….

கொஞ்சம் நட்பு நிறைய காதல்….

சுகுணா , தன் கல்யாண invitation ஐ ஒரு முறை வாசிக்க ஆரம்பித்தாள்…. சுந்தர் என்று இருக்கவேண்டிய இடத்தில் சுதாகர் என இருந்தது…. பிழை பத்திரிக்கையில் இல்லை.. விதியில் தான்…. கல்யாணப் பத்திரிக்கைகளை கையில் எடுத்துக் கொண்டு சுந்தர் வீட்டுக்கு கிளம்ப தயாரானாள்…

சுந்தரை முதன் முதலாய் பார்த்த நாள் சுகுணாக்கு நினைவில்லை.. ஆனால் சுந்தர்க்கு எதையுமே மறக்க முடியவில்லை..
காலேஜ் முதல் நாள், இவனிடம் வந்து தான் first year computer science class room எங்க இருக்கு என சுகுணா கேட்டாளாம்..
சுகுணா .. கொஞ்சம் கருப்பு.. ஆனால் செந்தமிழ் நாட்டு தமிழச்சி…. குடும்பபாங்கான முகம்… கொஞ்சம் வெள்ளந்தி…. யார் என்ன சொன்னாலும் மண்டையை ஆட்டுகிற type… ஆனால் சுந்தரோ யார் என்ன சொன்னாலும் சரியென்றும் சொல்லமாட்டான்.. அதே சமயம் தவறென்றும் சொல்ல மாட்டான்.. என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு போய்விடுவான்… அவனுக்கு சரியென்று எது தோணுதோ அதை தான் செய்வான்….சுந்தருக்கு கவிதை, பாடல் வரிகள் இதில் பைத்தியம்.. யாரையும் காதலிக்கலாமலே எல்லாவற்றையும் காதலித்து கொண்டிருப்பவன்.. சுகுணாவுக்கும் கவிதை/பாடலுக்கும் ஏழாம் பொருத்தம்…..

அவர்கள் காதல் எப்படி ஆரம்பித்தது என்பது மட்டும் இன்னமும் புரியாத புதிராய் இருக்கிறது அவர்கள் நண்பர்களுக்கு…. சுந்தர் அடிக்கடி சுகுணாவை கேக்கும் கேள்வி ஒன்று.. கல்லூரி வாழ்க்யில் காதல் ஏன் வந்தது என்பது.. யாராலுமே பதில் சொல்ல முடியாத கேள்விதான்…எல்லா நட்பும் காதலாவதில்லை.. எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லை.. இவர்களும் அதுக்கு விதிவிலக்கில்லை… நடந்து முடிந்ததைப் பற்றி நினனப்பதால்.. நினைத்தது என்ன நடக்கவா போகிறது….

கல்யாணத்திற்கு இன்னும் 7 நாள் தான் இருந்தது… அந்த 7 நாட்களுக்குள் எதுவும் நடக்கபோவதில்லை…. “உனை எங்கு பிரிகிறேன் உனக்குள் தானே வாழ்கிறேன்” என சுந்தர் சொன்னது நெஞ்சுக்குள் வலியாய் ஆராத ரணமாய் இருந்தது சுகுணாவுக்கு… அம்மா அப்பாவுக்காய் சுதாகரை மணக்க சம்மதித்து.. இதோ இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம்… இழப்பது உறுதியான பிறகு அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை சமாதானப்படுத்தி புது வாழ்க்கைக்கு தயாரானாள் சுகுணா.

(கதையின் முடிவு பிடிக்கவில்லயா… கடைசி பாராவிலிருந்து முதல் பாராவிற்கு தலைக்கீழாக படியுங்கள்.. இப்போது பிடித்ததா ?)

அப்பறம் ஒரு சின்ன புதிர்.. இந்த கதையில் ஐந்து பாடல் வரிகளும், ஐந்து படங்களின் பெயர்களும் ஒளிந்துள்ளன.. அது என்னவென்று சொல்லுங்களேன் …

- பிரியா …

  1. 11:47 மு.பகல் இல் நவம்பர் 10, 2009 | #1

    அருமை. நானும் அந்த சுதாகர் தான். :-)

  2. Nithin
    12:55 பிற்பகல் இல் நவம்பர் 10, 2009 | #2

    sorry priya oru mayirum purila

  3. Vijay
    2:55 பிற்பகல் இல் நவம்பர் 10, 2009 | #3

    enaku konjam purijathu konjam puriya villayea…. oru velai en mandaila kalli mann than irukoooo!!!!!!!

  4. 5:20 பிற்பகல் இல் நவம்பர் 13, 2009 | #4

    5 songs.
    1. செந்தமிழ் நாட்டு தமிழச்சி
    2. கல்லூரி வாழ்க்யில் காதல் ஏன் வந்தது – [oru kathal devathai]
    3. நெஞ்சுக்குள் [vaaranam aayiram]
    4. முதன் முதலாய் or முதல் நாள் [Dhaam Dhoom?]
    5. உனக்குள் தானே வாழ்கிறேன் [7G Rainbow colony?]

    5 movie names.
    1. விதி
    2. அந்த 7 நாட்கள்
    3. புரியாத புதிர்
    4. பொருத்தம்
    5. தமிழச்சி

    Am I Right?

    • 5:26 மு.பகல் இல் நவம்பர் 23, 2009 | #5

      5 songs.
      1. செந்தமிழ் நாட்டு தமிழச்சி
      2. கல்லூரி வாழ்க்யில் காதல் ஏன் வந்தது – [oru kathal devathai]
      3. நெஞ்சுக்குள் [vaaranam aayiram]
      4. முதன் முதலாய் or முதல் நாள் [Dhaam Dhoom?] // லேசா லேசா
      5. உனக்குள் தானே வாழ்கிறேன் [7G Rainbow colony?] //உனை எங்கு பிரிகிறேன் உனக்குள் தானே வாழ்கிறேன் (தெனாலி)

      5 movie names.
      1. விதி
      2. அந்த 7 நாட்கள்
      3. புரியாத புதிர்
      4. பொருத்தம் — இப்படி ஒரு படம் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை
      5. தமிழச்சி — இப்படி ஒரு படம் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை

      நான் எழுதியது

      1. விதி
      2. அந்த 7 நாட்கள்
      3. புரியாத புதிர்
      4. கல்லூரி
      5. வாழ்க்கை

      Am I Right?

  1. No trackbacks yet.